முட்டை மீதான கட்டுப்பாட்டு விலை நீக்க நடவடிக்கை..!
முட்டை மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், வெள்ளை முட்டைக்கு 44 ரூபா கட்டுப்பாட்டு விலையும், பழுப்பு முட்டைகளுக்கு 46 ரூபா கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச ஊடாக விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.