கடல் கடந்து வந்த காதல்…!
காதல் என்பது அழகான வரம் அது எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.ஆனால் காதலில் ஒருவர் மட்டும் உண்மையாகவும் மற்றவர் போலியாகவும் நடிக்கும் போது அங்கு உண்மையாக நேசித்தவர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்.
கட்டாரில் பணிபுரிந்த சமையம் இலங்கையை சேர்ந்த இளைஞனுக்கும் இந்தியா வேலூரை சேர்ந்த 32வயது இளம் யுவதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.
7 வருடமாக காதலித்த இளைஞனை கைபிடிக்கும் நோக்குடன் குறித்த யுவதி
இலங்கை ஓட்டமாவடிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.