BSMS பட்டம் பெற்ற மலையக மாணவன்..!
இன்றைய இளஞர்களே நாளைய தலைவர்கள் என்று சொல்லுவார்கள்.இவ்வாறு தன்னுடைய இளைமை காலத்தை சிறந்த முறையில் பயன் படுத்தி தன்னுடைய இலக்கை அடைந்தவர்கள் ஒரு சிலர் தான். அவர்கள் தான் வரலாற்றில் தமது பெயரினை பதித்து செல்கிறார்கள்.
மலையகத்தை பொருத்தவரை கல்வி ,பொருளாதாரம் ,அடிப்படை வசதிகள்,மருத்துவம் என பல்வேறுப்பட்ட துறைகளில் பின்தங்கியே உள்ளது. இவ்வாறான நிலையில் தான் மலையகத்தில் இருந்து ஒரு இளைஞன் தமிழ் சித்த மருத்துவ இளங்கலைமாணி (Bachlor of siddha medicine and surgery (BSMS) பட்டத்தினை அண்மையில் பெற்றுள்ளார்.
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பள்ளேகெட்டுவ ,ரெவன்சூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த செட்டி இராம நாதன் பிரசாந் குமார் என்ற இளைஞனே யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் இப்பட்டத்தினை பெற்றுள்ளார்.
பிரசாந் குமார் தனது ஆரம்ப கல்வியை பதுளை கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியினை யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் பதுளை பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியிலும்,BSMS பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து தனது இலக்கை அடைந்துள்ளார்.
இவருடைய தந்தையான செட்டி இராம நாதனை, பிரசாந் குமாரின் சிறுவயதிலேயே இவ் உலகை விட்டு இறைவன் பிரித்து செல்ல தாயான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மியின் அரவணைப்பினால் வளர்ந்துள்ளார்.அதிகமான அன்பு கொண்ட தாயான ஜெயலக்ஷ்மி தனது பிள்ளையை BSMS பட்டத்தை பெற்றமைக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.இவ்வணைத்து பெருமையும் அன்னையை சேரும்.இவருக்கு இரண்டு சகோதரர்கள் ஒருவர் இராமநாதன் பிரபாகரன் பதுளை கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றுகிறார், மற்றையவர் Grand Archy resort ன் முகாமையாளராக கடமையாற்றுகிறார்.
பிரசாந் குமார் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்து ஒன்றியத்தின் உப தலைவராகவும்,யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை மலையக மக்கள் மீதும் அதிக பற்றுள்ள பிரசாந்குமார் தன்னாலான உதவிகளையும் ஏழை மக்களுக்கு செய்து வருகிறார்.மற்றும் மலையக மாணவர்கள்,இளைஞர் யுவதிகள் என அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் எனும் நோக்கில் ‘மலைச்சுவடு’ எனும் நூலகம் அமைக்கும் திட்டத்தை நிறுவி செயற்படுத்திக்கொண்டும் வருகிறார்.இவர் தமிழ் மக்களோடு மட்டுமன்றி சிங்கள மக்களோடும் அன்யோன்யமாக பழகும் ஒரு சிறந்த இளைஞராவார்.இதே வேளை எந்த ஒரு மக்களுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் ஒரு நல்லுள்ளம் படைத்தவராவார்.இவ்வாறான ஒரு மனிதரை மலையகம் பெற்றது ஓர் வரப்பிரசாதமாகும்.