தொடர்பு துண்டிக்கப்பட்ட கோளை செயற்படுத்திய நாசா..!
விண்வெளி துறையில் நாசா பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்நிலையில் தான் மற்றுமொரு சாதனையாக தொடர்பு துண்டிக்கப்பட்டு நின்ற வாயேஜர் -02 என்ற செயற்கை கோளை மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி செயற்பட வைத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 1977 ம் ஆண்டு வாயேஜர்-02 என்ற செயற்கை கோளை அனுப்பி இருந்தது.இக் கோளானது தற்போது பூமியிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 400 கோடி தொலைவில் சுற்றி வருகின்றது. ஞாயிற்று தொகுதியை ஆராய்வதற்காக இந்த கோளை நாசா அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இக்கோளானது 46 ஆண்டுகளாக நாசாவுடன் தொடர்பில் இருந்து பல தகவல்களை நாசாவிற்கு வழங்கிவருகின்றமை குறிப்பிடதக்கது.
இக்கோளானது எதிர்வரும் 2027ம் ஆண்டுவரை செயற்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த இரண்டு வாரங்களாக இக்கோளில் இருந்து எந்த தகவலும் வராத நிலையில் அவுஸ்திரேலிய ரேடியோ டிஷ் என்டனாவில் அதிக ஆற்றல் கொண்ட ட்ரான்ஸ் மீட்டரை பயன்படுத்தி ஒரு புதிய கட்டளையை நாசா அனுப்பியது .இதன் போது வாயேஜர்-02 வின் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டது.இதன் பிறகு மீண்டும் வாயேஜர்-02 விடம் இருந்து தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.
இதன் மூலம் நாசா இன்னுமொரு சாதனையை படைத்து அசத்தியுள்ளது. இச்செயற் பாட்டினால் அனைத்து நாசா விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.