சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 7 வது குழுவை அனுப்பும் நாசா..!

நாசாவின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் 7வது குழு தயாராக இருக்கின்றது.புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி ஏவு தளத்தில் இருந்து பால்கன்-09 ரொக்கட் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ளனர்.

இந்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பானை சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும் ரஷ்யாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் செல்கின்றனர். இவர்கள் அடுத்த மாதம் ஓகஸ்ட் 17ம் திகதி தங்களது பணியை ஆரம்பிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அமெரிக்க விண்வெளி ஆராச்சி நிலையமான நாசா பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றது.இந் நிலையில் தான் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *