கிறுக்கல் வேளையில் ஈடுப்பட்டவர்கள் கைது..!
நம்மவர்களுக்கு எங்கு சென்றாலும் ஏதாவது கிறுக்கல் வேலையில் ஈடுப்படுவது வழக்கமாகிவிட்டது. பஸ் இருக்கைகளில் கிறுக்குதல்,பஸ் கண்ணாடியில் கிறுக்குதல்,காசுகளில் கிறுக்குதல் ,இவ்வாறாக பல விதமான கிறுக்கல்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
இவ்வாறு கிறுக்கல் வேளையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யபபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு தாமரைக்கோபுரத்தின் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவது வீடியோ காட்சிகளில் கண்டதற்கு இணங்க பல பெண்களையும் ஒரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர்.தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனத்தினால் மருதானை பொலிஸிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தான் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
இனியாவாது இந்த கிறுக்கல் வேளைகளில் ஈடுப்படுவதை தவிருங்கள்.