இயற்கை அழகை ரசித்திடவரும் சுற்றுலா பயணிகள்..!
இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வாரந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நான்காயிரத்து 608 பேரும் அமெரிக்காவில் இருந்து 4 ஆயிரத்து 254 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் இருந்து 2 ஆயிரத்து 246 பேரும், பிரான்ஸில் இருந்து ஆயிரத்து 842 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆயிரத்து 791 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு சுற்றுலா பிரயாணிகளின் வருகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
காலி,ஹிக்கடுவ,சீகிரிய,நுவரெலிய,கண்டி,யால,திருகோணமலை என்பன வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை அதிகளவு கவரும் இடங்களாக காணப்படுகின்றன.