Apple நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த தடை..!
ரஷ்யாவில் appleநிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
ஐ போன், ஐ பேட் உள்ளிட்ட உபகரனங்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைன் ற்கும் இடையில் போர் ஆரம்பித்ததை அடுத்து apple நிறுவனம் தனது நிறுவனத்தை ரஷ்யாவில் இருந்து வெளியேற்றியதுடன் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.எனினும் வேறு நாடுகளில் இருந்து apple உபகரணங்களை இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் தான் அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் apple கையடக்க தொலைபேசிகள்,பேட்கள் மூலம் அமெரிக்கா ,ரஷ்ய மக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் என எண்ணி இத்தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகாமைத்துவமும் apple நிறுவனமும் இணைந்து செயற்படுவதாக எப்.எஸ்.பி குற்றம் சாட்டி இருந்தது. இதன் அடிப்படையிலேயே இத்தடை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் மேற்கண்ட குற்றச்சாட்டினை apple நிறுவனம் மறுத்துள்ளது.