சந்திரனில் நொருங்கிய லூனா25
லூனா 25 ரஷ்யா விண்வெளி நிறுவனத்தின் கட்டுப்பாட்டரையுடனான துண்டிப்பை இழந்துள்ளதாக ரஷ்யா உத்தியோக பூர்வ மாக அறிவித்துள்ளது. 47 வருடங்களுக்கு பின் ரஷ்யா தோல்வியை சந்தித்துள்ளது.விண்ணில் தென் துருவத்தில் முதல் தடம் பதிக்கும் நாடு என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. இதே வேளை எதிர் வரும் புதன் கிழமை இந்தியாவின் சந்திரயான் -03 தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா , முதலாவதாக தென்துருவத்தில் தடம் பதிக்கும் நாடு என்ற அந்தை பெரும்.இதே நேரம் ரஷ்யாவின் தோல்வியால் ரஷ்ய விஞ்ஞானிகளும் மக்களும் கவலையடைந்துள்ளனர்.இதே வேளை இந்திய மக்களும் இந்திய விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 10ம் திகதி லூனா25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது ரஷ்யா.ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் வினால் திட்டமிடப்பட்டு இந்தியாவின் சந்திரயான்03 ற்கு முன்பதாக சந்திரனில் இறங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது.அதன் படி கடந்த 17ம் திகதி சந்திரனின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுளைந்தது.
தொடர்ந்து, படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. அதன் தொடர்ச்சியாக ‘லூனா-25’ விண்கலம் இன்று (திங்கட்கிழமை) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்தது. விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை ரோஸ்கோஸ்மோஸ் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘லூனா-25’ விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் நேற்று தெரிவித்தது. முன்னதாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் விண்கலத்துடனான தொடர்பை இழந்ததாகவும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துயிருந்தது. அதை தொடர்ந்து, விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்த நிலையில் ‘லூனா-25’ விண்கலம் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
இதன் மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் ‘லூனா 24’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைன் மூலமாக ரஷ்யாவின் மீது போர் தொடுத்துள்ளன. இந்நிலையில் லூனாவின் தோல்வியான பலத்த அடியாக அமைந்துள்ளமை குறிப்பிடதக்கது.ரஷ்வை வெருக்கும் மேற்குலக நாடுகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்த போதிலும் , ரஷ்ய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வருகின்ற ஆண்டுகளில் ரஷ்யாவின் லூனா26,27,28 என்பன பயணிக்க இருக்கின்றமை குறிப்பிடதக்கது.