வடகொரியாவின் மல்லிகியோங்-01 வெடித்து சிதறியது..!
விண்ணில் சாதிக்க வேண்டும் என்பது பல நாடுகளின் கனவு.இதில் பல நாடுகள் வெற்றிப்பெருகின்றன. சில நாடுகள் தோல்வியடைகின்றன.இந்நிலையில் வட கொரியாவால ஏவப்பட்ட உளவுபார்க்கும் 2வது செயற்கை கோள் தோல்வியை சந்தித்துள்ளது.
வடகொரியாவானது சொல்லிமா -01என்ற ரொக்கட் மூலம் மல்லிகியோங் -01 உளவு செயற்கை கோளை விண்ணில் ஏவியது.ஏவப்பட்ட செயற்கை கோளில் முதலாம் ,இரண்டாம் நிலைகள் இயல்பான நிலையில் இருந்தது. எனினும் மூன்றாம் நிலையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. எனினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3வது செயற்கை கோளை அனுப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த மே மாதம் அனுப்பப்பட்ட 1 வது செயற்கை கோளும் வெடித்து சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.