வெற்றி தோல்வி கடந்தது அறிவியல்-எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவு
உள்ள
வரை
மூளை
செல்கள்
உள்ளவரை
இதயமும்
உயிரும்
இருக்கும்
வரை
துடிக்கும்
வரை
மனதில்
ஆசைகள்
உள்ளவரை
விஞ்ஞானத்தின்
விஸ்தாரங்கள்
விரைவு
நிறைவு
தரும்
வரை
கண்டுபிடிப்பின்
பயன்
உலகம்
நுகரும்
வரை.
எடிசன்
டெஸ்லா
ஜி. டி. நாயுடு
சர். சிவி. இராமன்
டார்வின்
அப்துல்கலாம்
இவர்கள்
எல்லாம்
மனிதகுலத்தின்
அறிவு
விஞ்ஞானத்தின்
பிரதிநிதிகள்.
இவர்கள்
பிறந்த
மண்ணில்
மட்டுமல்ல.
உலக
மக்களால்
ஆராதிக்க
துதிக்கப்பட
வேண்டியவர்கள்.
அறிவின்
பயன்
யார்
கண்டுபிடித்தால்
என்ன?
சூரியனுக்கு
கீழே
நூதனமானது
என்று
என்ன?
விவிலியத்தில்
பிரசங்கி
கேட்கின்றான்.
உலகத்தில்
எனக்கு
மிஞ்சியது
என்ன
என்று
பகவான்
கிருஷ்ணன்
வினவுகின்றான்.
அனைத்துலக
ரப்பானவருக்கு
மறைபொருள்
ஆனது
எது
என்று
திருக்குரான்
வினவுகிறது.
தேடுங்கள்
கண்டடைவீர்கள்.
ஆர்க்கிமிடீஸ்
போல
கண்டடையும்
போது
நிர்வாணமாகி
போகாதீர்கள்.
புத்தன்
போல்
மகாபரி
நிர்வாணம்
அடைய
கற்றுக்கொள்.
பூரணம்
என்பது
ஏற்கனவே
அடையப் பட்டது.
அறிவியல்
வெற்றி
தோல்வி
கடந்தது.
முயற்சி
அறியாதவர்களின்
பரிசோதனை
முற்று
பெறுவதில்லை.
அதில்
நாடுகள்
வல்லரசு
அதி
மேதாவித்தனம்
பெரிய
அண்ணன்
இவையெல்லாம்
ஒன்றுமில்லை.
உலகம்
ஒரு
மரத்தினடியில்
ஆப்பிளை
விழ வைத்து
நியூட்டனை
உருவாக்கும்.
உணர்வுநிலை
மறக்க செய்து
மேரிக்யூரியை
ரேடியத்தை
கண்டுபிடிக்க
செய்யும்.
உறங்க செய்து
இராமனுஜத்திற்கு
கணித
விடை
பகரும்.
எந்த
விஞ்ஞானமும்
மனிதனை
பண்படுத்தட்டும்.
நட்பு
நாடுகள்
பகை
நாடுகள்
என்று
அஞ்சி
சாவதற்கு
பெயர்
அறிவியல்
என்றால்
அது
இல்லாது
போகட்டும்.
உலகை
கெடுத்தது
போதும்.
அயல் கிரகங்களில்
இருப்பவர்களின்
இருப்புநிலை
உன்னால்
கெடாதவாறு
வாழ்ந்து
பழகு.
மனிதனுக்கு
மேல்நிலை
உயிர்கள்
உள்ள
தேடல்
இது.
கண்டறியும்
போதும்
கண்டறிந்த
பின்பும்
அன்பு
மட்டுமே
உயிர்
சுதந்திரம்
தரும்.
ரஷ்யாவின்
படிப்பினை
கம்யூனிஸம்
என்றால்
உலகத்திற்கு
அது
பொதுவானது.
ரஷ்யாவின்
விண்வெளிகலன்
லூனா
தோல்வி
அல்ல.
அது
உலகிற்கு
படிப்பினை
போதனை.
நமது
இஸ்ரோவை
அது
ஆயிரம்
மடங்கு
நிதானிக்க
சிரமேற்க
யோசிக்க
வியக்க
ஆச்சரியக்க
வைத்திருக்கும்.
தோல்வி
என
நண்பன்
கதற
வாய்ப்பளிக்காமல்
சந்திராயன்
வெற்றி
பாரதத்துடன்
அனைத்து
நட்பு
பகை
நாடுகள்
கொண்டாட
உளமாற
வாழ்த்துகின்றேன்.
கேலோமி
மேட்டூர் அணை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *