சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் உற்பத்தி செய்தவர்கள் கைது..!
தந்தையும் மகனும் இணைந்து தோட்டாக்கள் ,துப்பாக்கிகள் ,வெடிமருந்துகள் என்பவற்றை சட்டவிரோதமான முறையில் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லெலிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாண புலனாய்வு பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றி வளைப்பு இடம்பெற்றது. இதன் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன்
இரண்டு துப்பாக்கிகள், இரண்டு துப்பாக்கி உறைகள், இரண்டு பிரித்தெடுக்கப்பட்ட ஏர் ரைபிள்கள், பல்வேறு துப்பாக்கிகளின் பல பாகங்கள், ஈயத் தொகுதிகள், ஈயப் பந்துகள்,ஈயப் பந்துகள் தயாரிக்கப் பயன்படும் கருவி, தயார் செய்யப்பட்ட ஈயப் பந்துகள் நிரப்பப்பட்டு பதப்படுத்தப்பட்ட பொருட்கள்,வெடி மருந்துகள், வெடி மருந்துகளை நிரப்ப பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் மற்றும் பல கத்திகளும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உபகரணங்கள் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களுக்கு 40000 ரூபா முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் பணியாற்றிய காலத்தின் அனுபவத்தின் அடிப்படையில் இருவரும் இந்த தொழிலை ரகசியமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.