முத்தத்தால் நடந்த விபரீதம்…!
காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் மௌன மொழியே முத்தம் .இன்றைய காதலர்கள் அடிக்கடி முத்தங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.இதில் லிப்லொக் முத்தமிடும் போது நரம்பு மண்டலத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன.இவை உடலுக்கும் நன்மையளிப்பவையாக இருக்கின்றன.இருந்த போதிலும் பல பாதிப்புக்களும் இருக்க தான் செய்கின்றன.
இவ்வாறான ஒரு பாதிப்பு அண்மையில் இடம் பெற்றுள்ளது.
சீனாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஏரி பகுதியில் வைத்து 10 நிமிடங்களுக்கு லிப்லொக் செய்துள்ளனர்.இதன் போது காதலனுக்கு காதில் ஊசி குத்துவது போல் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதலன் காதலியிடம் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதனைநடுத்து முத்தத்தை நிறுவிட்டு அமரந்திருக்கின்றனர். எனினும் காதலனின் காது குறையாமல் அதிகரித்ததுடன் காது கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இதனையடுத்து இருவரும் வைத்திய சாலை ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட போதுகாதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் குறித்த நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.குணமடைய குறைந்தது 2 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த சம்பவமானது காதலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.