இந்திய பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன..!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைப்பெற்றுவருகிறது.இந்நிலையில் நாளைய தினம் இந்திய பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் பல பரீட்சை நடாத்துகின்றன. ஏற்கனவே நேபாள அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று நாளைய தினம் இந்திய அணியுடன் மோதுகின்றனது.
இந்நிலையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோஹோலி பாகிஸ்தான் அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆகவே நுணுக்கங்களை கருத்திற்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் நவம்பர் மாதம் நடைப்பெற உள்ள உலக கிண்ண தொடருக்கு சிறப்பாக விளையாடும் பொருட்டு இந்த போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது.