நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம்..!
நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இப்பள்ளமானது ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் விழுந்து நொருங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
லூனா 25 விண்கலம் விழுந்த இடத்தை கண்காணித்து வரும் நாசாவின் ஆர்பிட்டர் படம்பிடித்துள்ளது.லூனா 25 தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அண்மையில் இந்த புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இது லூனா -25 விழுந்த பள்ளமாக இருக்கலாம் என LRO குழு முடிவெடுத்துள்ளது.இப் பள்ளமானது 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 எடுத்த புகைப்படத்தையும் லூனா -25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் சந்திரயான் -03 க்கு முன்பதாக லூனா-25 ஐ தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில் தான் லூனா -25 தரையிறங்குவதற்கு முந்தைய சுற்று வட்டப்பாதையில் நுளையும் போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.