திருநெல்வேலி இதற்குதான் மிகப்பிரபலம்..!
திருநெல்வேலி தூத்துக்குடி கோவில் பட்டி இந்த பெயரினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .ஏன் எனில் நாம் அனைவரும் சாப்பாட்டு பிரியர்கள்.இங்கு விசேடமாக பெயர் போனது தேங்காய் பால் சொதி குழம்பு.விசேடமாக இங்கு திருமணமான மறு தினம் சொதி சாப்பாடு சாப்பிட வாருங்கள் என்று மணமக்கள் ,நண்பர்கள் ,அயலவர்கள்,உறவினர்கள் அழைத்து விருந்து கொடுப்பர்.இதன் போது சொதி சாப்பாடு வழங்குவது வழக்கம்.உங்களுக்காக தேங்காய் சொதி செய்வது எப்படி என்று உங்களுக்காக தருகிறேன்.
தேவையான பொருடகள்
- தேங்காய் துருவிய பூ
2.போஞ்சி
3.கரட்
4.தண்ணீர்
5.கத்தரிக்கா
6.முருங்கை கா
7.உருளை கிழங்கு
8.பச்சை பட்டாணி
9.அவித்த பாசிப்பயறு
10.உப்பு
11.முந்தரி பருப்பு
12.பச்சை மிளகாய்
13.இஞ்சி
14.எழுமிச்சை பழம்
15.எண்ணெய்
16.கடுகு
இவையாவும் தேவையான அளவு.
செய்முறை
தேங்காய் பூவை அரைத்து அதன் பாலை முதலாம்,இரண்டாம்,மூன்றாம்,பாற்களாக பிரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்( தேங்காய் பூ அரைக்கும் போது பச்சை மிளகாய்,இஞ்சி இணைத்து அரைத்துக்கொள்ளவும்) பிறகு இரண்டாம் பாலையும் மூன்றாம் பாலையும் இணைத்து இதில் மரக்கறிகளையும் நன்றாக வேகவிட்டதன் பின் , பாசி பயறினை மசித்து மரகறி கலவையினுள் இட்டு கிளற வேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கொதிக்க விட்டு அதில் கடுகு, உளுந்து சிறிதளவு,கருவேப்பிலை ,சின்ன வெங்காயம்,முந்தரிபருப்பு அனைத்தையும் இட்டு பொரித்து எடுத்து மரக்கறி கலவையில் கொட்ட வேண்டும்.இதன் பிறகு முதலாம் பாலை இட்டு கொதிக்க விடாமல் அடுப்பை அணைத்து எழும்பிச்சை பழச்சாறு இட்டு இறக்க வேண்டும்.
இதனோடு உருளை கிழங்கு பொறியல்,உருளை கிழங்கு சிப்ஸ்,உருளை கிழங்கு வறுவல்,மரவள்ளி கிழங்கு சிப்ஸ்,அப்பளம்,இஞ்சி பச்சடி,இஞ்சி துவையல்,கொத்தோரங்கா வத்தல்,மோர் மிளகாய் சாப்பிடும் போது மிக பிரமாதமாக இருக்கும்.
கட்டாமாக இதனோடு இஞ்சி பச்சடி அல்லது இஞ்சி துவையில் சாப்பிடுங்கள். ஏனெனில் பித்தத்தினை கட்டுப்படுத்துவதற்கு.நட்புகளே எங்களுடை ஊரில் இது மிக பிரபல்யமானது. சொதி சாப்பாடு சாப்பிட்டால் தான் திருமணமே முடிந்தது போல் இருக்கும்.
எழுதுவது-கோமதி சிதம்பர நாதன்
உரையூர் ,திருச்சி