மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு..!
தந்தையை மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த ஓகஸ்ட் 31 திகதி இரவு நேரத்தில் 26 வயதுடைய மகன் சத்தமாக வானொலியை கேட்டுக்கொண்டிருந்தார்.
சத்தம் அதிகமாக இருந்தமையால், சத்தத்தை குறைக்குமாறு மகனுக்கு தந்தை அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு செவிசாய்க்காமையால், வானொலி பெட்டியை தந்தை நிறுத்திவிட்டார். இதனால்,
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுள்ளது. இதனையடுத்து தந்தையை மகன் தாக்கியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் கீழே விழுந்த தந்தையை சந்தேகநபரான மகன், தங்கொட்டுவ வைத்தியசாலையில் தானே அனுமதித்துள்ளார்.
தன்னுடைய தந்தை வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்த போது சந்தேகநபர்கள் சிலர் தன்னுடைய தந்தையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வைத்தியசாலை அதிகாரிகளிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதன பிறகு மேலதிக சிகிச்சைகளுக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .இதன் போது பொலிஸாரிடமும் தந்தையினால் வாக்குமூலம் வழங்க முடியவில்லை அவ்வளவு தூரம் தந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 04 ம் திகதி தந்தை உயிரிழந்துள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தந்தையை தாக்கியது இனம் தெரியாதோர்கள் அல்ல , சொந்த மகனே என்பது.
இதனையடுத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.