என்னவளை விட யாரும் அழகில்லை..!
மனமேறும் என்தமிழே மயங்காது என்மதியே வழிந்தோடும் அழகியலை வடிவாக்க வந்தாயோ
ஈரடிச்சொற்களாய் அவளிருவிழி நாவலாய் எழுத்தாணி எண்ணுகையில் ஏட்டினங்கள் எதிர்த்தாடுமோ என் பாட்டினில் குறையேதுமோ மயிலினங்கள் தூரிகையோ அவள்விழி புருவங்களோ புடலையின் நீளமதிலே அவளிரு கரங்களோ இலைமறைவில் இருகனியோ இதழாடா அறுசுவையோ ஆனந்த ராகம்கொண்டு ராப்பொழுது பாடும் சிந்து உன் சந்தம் துளைக்காதோ என் தமிழும் சிறக்காதோ...என் தமிழும் சிறக்காதோ... மடலாடும் பொன்மேனி மடியாடும் பெண்வீணை நடந்தாடும் தண்டினமும் நர்த்தனம்தான் ஆடாதோ தில்லையின கிள்ளையிவள் திரிகடுக சொல்லவள் தீராத மோகத்தில் தாராயோ என் பாட்டொன்று நீயும் கேளாயோ பாவையுந்தன் வாய்மொழியும் பைந்தமிழாம் என் மொழியும் இணைந்தாலே இன்பமடி நீ பிரிந்தாலே என்மொழியும் வெம்புடி...என் மொழியும் வெம்புமடி. ப.கல்யாணசுந்தரம் 21/09/2022