யார் அவன்?

அவன்
கடவுளா?


குழந்தையா?


அவதாராமா?


மகாபாரதத்தின்
சாரதியா?


பகவத் கீதையின்
ஆச்சாரியனா?


அவனால்
செய்யப்பட்ட
அற்புதங்கள்
அதிசயங்கள்
கற்பனையா?


புராணக் கதையா?


மிகைப்படுத்தலா?


விமர்சனமா?


ஆத்திகமா?


நாத்திகமா?


பகுத்தறிவுக்கு
ஒவ்வாத
விசயமா?


நாலாயிர
திவ்வியபிரபந்தத்தின்
நாயகனா?


ஆழ்வார்களின்
பிராணநாதனா?


திவ்விய
தேசங்களின்
இறைவனா?


தேடி
அறியப்படும்
வஸ்துவா?


பிருந்தாவனத்து
தவப்புதல்வனா?


பாகவத
விஷ்ணு
புராணங்களின்
நாதனா?


திருப்பாற்கடலில்
சயணிக்கும்
அனந்தசயன
நாயகனா?


பக்தியால்
தர்மத்தால்
கண்டறியப்படும்
சுகானுபவமா?


ஆத்ம
தேடலா?


கண்ணன்
என்
காதலனா?


குழந்தையா?


அவன்
இராமனா?


சகஸ்ரநாமங்களின்
வீரிய
விலாசமா?


வசுதேவனின்
புத்திரனா?


பசுக்களின்
இறைவனா?


உயிர்வாழிகளின்
புல்லாங்குழலா?


புவனத்தின்
சுவனத்தின்
அண்டபகிரண்டத்தின்
தோற்றுவிப்பாளனா?


காப்பவனா?


கருமைநிற
கண்ணனா?


நெருங்குபவர்களின்
உணர்ச்சிகளுக்கும்
வயப்படுதலுக்கும்
ஏற்றவாறு
தன் மாற்றத்தை
அவர்களில்
விதைத்து
விஞ்ஞானம்
மெய்ஞானம்
நவபக்திகள்
தர்மம்
நீதி
நியாயம்
முக்தி
பக்தி
யுக்தி
என்று
பல விடயங்களை
இகம்
பரம்
இம்மை
மறுமை
மும்மை
எந்தை
நுந்தை
நம்மை
மந்தைகளாக்கி
மொந்தையில்
பக்தி
எனும்
அமிர்தத்தை
நல்கும்
கிருஷ்ணன்
ஓர்
புதிர்.


பொக்கிஷம்
ஞானம்.


அவனை
அறிவதால்
பகைப்பதால்
வாழ்த்துவதால்
தூற்றுவதால்
ஒருவனுக்கு
நிச்சயம்
நன்மை
உண்டு.


அவனது
பார்வை
தர்மனுக்கும்
சகுனிக்கும்
பேதம்
பார்த்ததில்லை.


சிசுபாவனுக்கும்
உத்தவனுக்கும்
பேதம்
பார்த்ததில்லை.


அவன்
அவன்
வசத்தில்
மட்டுமே
நம்மில்
உள்புகுந்து
எதன்
வசமும்
சிக்காத
ஆட்படாத
நம்
நன்மை
தீமையின்
ஏகவஸ்து.


கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *