மொரோக்கோவும் நில அதிர்வும்..!
அகழ்வாரை
தாங்கும்
நிலம்
போல
என்ற
குறள்
தனது
குரலை
இழந்ததோ?
கட்டிய
வீடுகள்
பணி
ஆற்றும்
இடங்கள்
மருத்துவமனைகள்
இன்று
புதைகுழி
ஆனதோ?
உயிர்
உடல்
அதன்
மரண
ஓலங்கள்
ஒரு
ஷணத்தின்
நில
அதிர்வில்
நிர்மூலமாயின.
இயற்கை
இறைவன்
நம்பிக்கை
ஸ்திரத்தன்மை
கல்வி
விஞ்ஞானம்
கட்டுமானங்களின்
கல்வி
பயன்படுபொருள்களின்
உறுதி தன்மை
எல்லாம்
வெற்று
அறிக்கையின்
அதிர்வெண்கள்.
நிலையற்ற
சட
உலகத்தில்
மனிதன்
வாழ்வது
ஒரு
அணுக்கத்துகளின்
மீ
கோடியில்
ஒர்
நொடியோ?
காலம்
என்ன
செய்ய
காத்திருக்கிறது.
பஞ்சபூதங்களின்
தந்திரம்
அறியாமல்
தரித்திரத்தின்
பிள்ளைகளாக
இங்கு
சரித்திர
ஆராய்ச்சி.
வானத்தில்
ஏற
வழி
கண்டோம்.
பூமியில்
தப்பித்து
வாழ
ஏது
செய்வோம்?
நீரில்லை
உணவில்லை
சுத்த
காற்று
இல்லை.
நிம்மதி
அன்பு
உறவு
உண்மை
நேர்மை
வாக்கில்லை.
சற்றே!
இங்கு
வாய்க்கரிசி
இல்லை.
கதறிய
குரல்களின்
அறிக்கை
சற்றே!
சொல்கிறது.
நிலையில்லாத
உலகமடா?
நித்தம்
உனக்கு
கண்டமடா?
அன்பாக
அமைதியாக
ஆனந்தமாக
கடந்து
போ!
இல்லை
மொத்தம்
ஓர்
நொடியில்
வீழட்டும்
இந்த
மகா பிரபஞ்சம்.
அமைதி
காட்டில்
இங்கு
அசுர
ஓநாய்கள்.
இயற்கை
மனிதனை
விட
கோரமாகி
கோபமாகி
போனது.
மொராக்க
பட்டினத்தில்
மீண்டும்
அமைதி
திரும்பட்டும்.
போன
உயிர்களை
திருப்பி
தருவாயா?
நில
அதிர்வே!
இரவில்
உறங்கும்
போது
உயிர்களை
பறித்து
பெரும்
பாதகம்
செய்தாய்?
இனி
வாய்ப்புகளை
வழங்கு.
தப்பி
பிழைத்து
செல்ல
ஆயிரம்
கோள்கள்.
அமைதி
தவழட்டும்.
அனைத்து
பிராந்தியங்களிலும்.
உயிர்களின்
வலி
தெரிய
வழி
பிறக்கட்டும்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை.