இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகரம்..!

இலங்கை தீவின் மலையகத்தின் தலை நகரமாகவும் ,இலங்கையின் இரண்டாவது தலை நகரமாகவும் விளங்குவது கண்டி நகரமாகும் .இது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமாகும்.இங்கு தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர் என ஒருங்கே ஒன்றிணைந்து வாழும் ஓர் நகரமாகும்.இது அதிகாலை முதல் இரவு வரை மிகவும் பரபரப்பாக இயங்கும் ஓர் நகரமாகும். அதிகமான வர்த்தக நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வந்து செல்லும் ஓர் மத்திய நிலையமாக கண்டி திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.

இங்கு நெடுந்தூர போக்குவரத்து சேவை குறுந்தூரபோக்குவரத்து சேவை என பல்வேறுப்பட்ட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன.மற்றும் இலங்கையில் இருக்கின்ற மிக பெரிய வைத்திய சாலையும் கண்டியில் தான் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர்.அது மாத்திரமன்றி கண்டி நகரத்திட்கு அருகாமையில் இருக்கும் பேராதனையில் ஶ்ரீமாஹோ பண்டார நாயக்க சிறுவர் வைத்திய சாலையும் அமையப்பெற்றுள்ளது.

மற்றும் உள்ளாச பிரயாணிகளை கவரும் தலதா மாளிகை , லேக் வட்ட குளம், பேராதனை தாவரவியல் பூங்கா,பைரவ கந்த மலை,கதிரேசன் ஆலயம்,கண்டி ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ,விக்டோரியா நீர்த்தேக்கம் என பல்வேறுப்பட்ட இடங்களும் காணப்படுகின்றன. இதனால் உள்ளாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளும் இங்கு வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னன் கீர்த்தி ஶ்ரீ விக்கிரம இராஜசிங்கன் தங்கி இருந்த ஹுண்ணஸ்கிரிய மெதமஹாநுவர மலைப்பகுதி, நக்கீல் மலைதொடர் என பல வரலாற்று சிறப்புமிக்க மரபுரிமை நகரமாக கண்டி மாநகரம் திகழ்கின்றது.

கண்டியில் காணப்படும் இன்னுமொரு விசேட அம்சம் தான் தலதா பெரஹெர .இதில் பல அழகரிக்கப்பட்ட யானைகளுடன் , பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளுடன் பெரஹெர பவனி வருவது ஆகும் .இதனை கண்டு மகிழ பல்லாயிரகணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இப்படியா பட்ட கண்டி மாநகரத்தினை பார்வையிட நீங்களும் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *