நில அதிர்வு பதிவு..!
இன்று அதிகாலை 1.30 அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழகடல பகுதியிலேயே இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இவ் நிலநடுக்கமானது 4.65 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இவ் நில அதிர்வின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை அண்மையில் மொரோக்கோவில் நடந்த நில அதிர்வின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் நில நடுக்கம் ஏற்பட்ட நேரம் இரவு நேரமாக காணப்பட்டதால் துரதிஷ்டவசமாக ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். இவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.