அன்பை கொடுக்கும் மனம்..!
அன்பு கவிதை
செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும் ஆனால் உன் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை.
அழகை பார்த்து காதலித்து விடாதீர்கள் இளமையில் மோகமே அழகாக தெரியும் முதுமையில் அன்பு தான் எல்லாமுமாய் தெரியும்.
அன்பு எவ்வளவு கிடைத்தாலும் சலிக்காது! வெறுத்தாலும் விட்டு விலகாது!
அன்பு கோபத்திலும் குறையாதது சாகும் வரையிலும் விடாதது.
தூய்மையான அன்பு பனவெல்லம் போன்றது திகட்டத் திகட்டத் என்றாலும் சுவை மாறாது.
உண்மையான அன்பு மலைகளில் தோன்றும் அருவி போல ஆயிரம் கசப்பான செடிகளை சுமந்து வந்தாலும் அனைத்தும் மூலிகையை ஒருமுறை பழகினால் போதும் பாசம் மாறாமல் உன் பின்னால் வரும் உயிரினங்களின் அன்பு.
அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு அதை பெற்றாலும் கொடுத்தாலும் மகிழ்ச்சியே.
அன்பு கிடைத்த அவர்களுக்கு பொக்கிஷம் அன்பை இழந்தவர்களுக்கு தேடும் புதையல்.
நேசம் போன்று நடிப்பவர்களின் நடிப்பிற்கு அன்பின் நாமங்களை சூடாதீர்கள். அவர்கள் அன்பின் எதிரிகள், அன்பின் கொலைகாரர்கள்.
அன்பு நினைவுகளை இனிதாக்கும் சந்தோசம் மனதை உருக்கும்.
அன்பே வீட்டோடத விழுது ஆகும் நிழல்தரும் நிஜமாகும்
அன்பே எதிர்பாராதது எதிர்திசை ஏற்கும் ஏக்கம் எனும் தாகம் தணிக்கும்.
அன்பே வெறுப்பை உண்டு உரமாக்கும் புன்சிரிப்பு நம் முகத்தில் அன்பால் பூக்கும்.
அன்பு மேடு பள்ள உலகை நேராக்கும் பிரிவில்லா புரிதல் கொள்ளும்.
அன்பை கொடுக்கும் மனம் கொண்டால் இரக்கமும் நம் இயல்பாகும்.
விதைக்கும் விதையே அன்பான நாள் நாளை மலரும் தலைமுறையிலும் அன்பே சிவமாகும்.
அன்பு என்னும் புத்தகத்தின் முடிவுரை, பெரும்பாலும் பிரிவாகத்தான் இருக்கிறது.
அன்பின் வடிவம் பல கோணத்தில் வரலாம் ஆனால், உன்மையான அன்பு உருவத்தில் உருவாகுவதில்லை உள்ளத்தால் உருவாகுவதே.
உஷா வரதராஜன்.