உயிர் வாழிகளின் ஜீவ அமிர்தம்..!

அரிசி
அறிவு
பதினாறு
கலைகளை
விழிக்க
செய்யும்
உயிராற்றலின்
உந்துசக்தி.

உயிர்வாழிகளின்
ஜீவிதாமிர்தம்.

உணவின்
திரு.

உயிரின்
களம்.

இரத்ததுளிகளின்
நினைவு
அமிர்தம்.

அன்னப்பிரசன்னத்தின்
குருவாயூர்
அப்பன்.

பால்சோறின்
பவித்ர
தன்மை.

நோயாளிகளின்
போர்க்கால
அரிசி
கஞ்சி.

நோஞ்சான்களின்
உடனடி
பசிபிணி
மருந்து.

வள்ளலாரின்
உற்ற
உயிர்
தோழன்.

பழைய
சோற்றின்
அமிர்த
கரைசல்.

கோபுரகலசத்தின்
உயிர்
பேழை.

கருவூலம்
திருவூலம்
எல்லாம்
அரிசிக்கு
முன்
பணிந்து
வழிபடும்.

பசிக்கு
அருமருந்து.

உணவுக்கு
பின்
ஆனந்த
கோலாகால
தூக்கம்.

சற்றே
இரத்தம்
திமில்
திமிர்
ஊற
ஜல்லிகட்டு
காமம்.

மஞ்சள்
கூடிய
அரிசி
யாகங்களின்
யோகங்களின்
மங்கலங்களின்
திருமணங்களின்
இல்லங்களின்
உள்ளங்களின்
இணைப்பின்
வாழ்த்து
சங்கமம்.

அரிசி
ஆயிரம்
வகை.

ஒவ்வொரு
வகையும்
பாரம்பரியத்தின்
வழிபாடு.

இட்லி
தோசைகளின்
ஊத்தப்பங்களின்
ஆதிமூலம்.

இன்னும்
சொல்லப்படாத
சூட்சுமங்களின்
பரிவர்த்தனை.

வேலை
செய்யாதவனின்
குடும்ப
அர்ச்சனை.

தண்டசோறு.

தெண்டசோறு
வாழ்வும்
வாழ்த்தும்
பழிப்பும்
ஒன்றாக
ஏற்கும்
தமிழனின்
பொங்கல்
சிறப்பு.

அம்மா!

தாயே!

என்ற
பிச்சைக்காரனின்
பல வீட்டு
உரிமை
உணவு.

இல்லறம்
நல்லறம்
காப்போனின்
அழகிய
நடப்பு.

வாழ்க்கை
ஒட்டம்.

அரிசி
ஆறாது
ஆற்றாது
lஅதன்
மகத்துவம்.

சுடுசோறு
ஆறுவது
போல்
ஆறாது
அதன்
ஊக்கம்
உத்வேகம்
கம்பீரம்.

கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *