உன்னில் தொலைந்த நான்..!
உன் அன்பில் தொலைந்து விட்டேன்.
யாருமற்ற தனிமையில்
தொலைந்து தொலைந்து
துவண்டு விட்டேன்..!
போ உன் நினைவுகூட
வேண்டாம்.
தொலைவதும்
ஓர் சுகம் தான்
யாராவது..
தொலைந்து விடாதே
என்று கொஞ்சும் போது..
மிஞ்சி மிஞ்சி பார்த்தால்
கெஞ்ச..கூட யாருமில்லாத
தனிமையில் கொஞ்சல்..பற்றி
நினைப்பதாவது..
சீ.. தொலைந்து போ..
என்னை நானே திட்டி கொள்கிறேன்
எப்படி தொலைவது.
எங்கிருந்து தொலைவது?
தொலைந்து விட்டேன் என
முகத்தை மூடி கொண்டால்..
தொலைந்து விடலாமா
இல்லை நடு இரவில்
யாருமற்ற நிசியில்
என்னை மறந்து நடக்கட்டுமா?
எனக்கே தெரியாமல் ஒரு
உண்மை .. உங்களுக்கு
மட்டும் கூறவா.
இப்போதும் கூட தொலைந்து தான்
இருக்கின்றேன்.. என்பது
யாருக்குமே தெரியாது..என்னை தவிர…
உஷா வரதராஜன்.
..