பெண் அடிமை
பெண் அடிமை
பெண்ணின்றி இல்லை உலகு!
அத்தனை நதிகளுக்கும் அவளது பெயரே!
பூமிக்குக்கூடபூமித்தாய்
என்றே சிறப்புப்பெயர்!
அன்னையைப் போல் தெய்வம் இல்லை என்பதே அகிலத்தின் பேச்சு!
அவளின்றி குடும்பம் ஏது!
எத்தனைதியாகங்கள் அவளது ஆசைகளை குழியிலிட்டு குடும்பத்தாரை சிகரம் பார்க்கச் செய்த தியாகத்தின் சின்னம்!
குடும்பத்தார் பசியாற்றி தன்பசி மறந்த பசியாவரம் வாங்கிய பக்தை!
ஆணாதிக்க சமூதாயத்தில் அவளது தியாகங்கள் மறைக்கப்பட்டன!
ஆசைகள் ஒழிக்கப்பட்டன.
உணர்வுகள் ஒசையின்றி ஓழிந்தது!
காலங்களில் எத்தனையோ மாற்றம்!
பெண் என்ற ஒரே காரணத்தால் பேதையிவள் வாழ்வில்
எப்போதும் அடிமைச்சங்கிலிபிணைக்கப்பட்டே உள்ளதே!
எண்ணங்களைக் கேட்கக்கூட
ஆளின்றி சிக்கிய மயிலவள்!
எப்போது கிடைக்கும் இவளுக்கு சுதந்திரம்????
கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி3