சாய்த மருதில் ஆர்ப்பாட்டம்..!
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாய்த மருதில் கால் வைக்க கூடாது என குறிப்பிட்டு இன்றய தினம் சாய்த மருது ஜும்மா பெரிய பள்ளி வாசலில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று நடைப்பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகபகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் ன் 23 வது நினைவு தினம் சாய்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பட்பாடு செய்யப்பட்டிருந்து.
இந்நிலையில் தான் குறித்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றிருந்தது.இதன் போது ரவூப் ஹக்கீம்,எச்.எம்.எம் ஹரிஸ்,சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.