இதற்காக தான் மொபைல் பயன்படுத்துகின்றனரா?

எண்ட்ரோய்டைத்
தடவித் தடவிப்
போகுதிந்த வாழ்க்கை – ஆனாலும்
நமக்குயெல்லாம்
அதிலதானே வேட்கை …!
முகம் குணிந்து
வணங்குவதால் – நீ
எங்கள் மதமற்ற
கடவுள் …!
உன்னை
ஒரு நொடியும் பிரிவதில்லை
என்னே எங்கள் பக்தி …!
எங்கள் பக்திக்கு மெச்சி
நீயும் பல கனவுகளை
வளர்ப்பாய் …!
இனி
நாங்களும்
தூங்க மாட்டோம்
எவரையும் தூங்க விடவும்
மாட்டோம் …!
இது
உன் உடல் மீது சத்தியம் …!
ஒரு புறம் சீரழிவும் ,
மறுபுறம் பேருண்மைகளும்
உன்னால் வந்து சேருது …!
அதனால் தான்
சொல்லுகிறேன் – நீ
எங்கள் கடவுள் , கடவுள்
கடவுள் என்றே
ஓங்கி நின்று
கூவுகிறேன் …!
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052