தோற்று போகும் சாம்ராஜ்யங்கள்

தீண்டாத
இளைஞர்கள்
ஜனிப்பது
இல்லை.
கண்விழிப்பில்
தொடங்கி
உறங்கி
உறங்கா
காலத்தின்
தகவல்
நிலையம்.


ஆசைகளின்
காமத்தின்
வேகத்தின்
மோகத்தின்
காதலின்
அழகிய
ஆடை
அவிழ்ப்பு.


கனவு
தோழிகளின்
லெக்பீஸ்
நடிகைகளின்
பாய்
பிரண்டுகளின்
அதி
நவீன
விரச
சரச
காம
படங்கள்
பாடங்கள்.


இளமையின்
வேகத்தில்
முற்றும்
மறந்து
போன
காம
காட்டாறுகள்.


புத்தி
சொல்பவர்
யாருமில்லை.


பக்தி
சொல்வார்
யாருமில்லை.


கணவன்
மனைவி
காதலன்
காதலி
அண்ணன்
தங்கை
அம்மா
அப்பா
அறிய
இயலாத
பாஸ்வேர்ட்
நம்பர்களின்
ஆசை
அலைகளிப்புகள்.


தான்
யார்
என்று
உலகில்
காட்ட
இயலாத
ஆயிரம்
முகமூடிகள்.


தகடி
வேலைகள்
நம்பிக்கை
துரோகங்கள்
அதன்
மொழிகள்
சதிகள்
உலக
மொழிகள்
அத்தனையும்
தோற்றுபோகும்
சங்கேத
சாம்ராஜ்யங்கள்.


நீ
யார்
என
தெரியாத
வாழ்க்கையை
உணர்வை
உணர்ச்சியை
வடிகாலை
உன்
மான
ஈன
நாடி
நரம்பு
வாக்கு
புத்தி
யுக்தி
தார்பரியத்தை
தார்மீக த்தை
மொபைல்போன்
காற்றலையில்
பதிவாகி
இருக்கும்.


எல்லாம்
ஒருவரை
ஒருவர்
ஏமாற்ற
உறவாட
களவாட
கற்பாட
நிறைய
சதிவலை
பின்னல்
கற்று
கொண்டோம்.


நிறைய
துரோகத்தை
நம்பிக்கை
இழப்பை
செய்து
கடந்து
போக
கற்றுக்கொண்டோம்.


ஆன்லைன்
சாட்டிங்
டேட்டிங்
மோசடி
சைபர் க்ரைம்
கற்று
காவல்துறை
அதிகாரிகளுக்கு
தலைவலி
ஆனோம்.


அறம்
என்பது
அழிந்து
போனாலும்
அடே!
தீமையை
மட்டும்
சொல்கின்றாயே!


நல்ல
தகவலை
பக்தியை
நன்னடத்தை யை
என்னில்
தேடு.


நீ
எதை
தேடுகின்றாயோ!


அதை
நான்
தருகின்றேன்.


முடிந்தால்
நன்மையை
தேடு.


நாடு.
தீதும்
நன்றும்
மொபைல்
தர
வாரா..!


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *