மக்கள் தொகையை அதிகரிக்க திட்டம்..!
ரஷ்யாவில் உள்ள பெண்கள் அனைவரும் குறைந்தது 8 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழிலுக்கு தேவையான மக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.அதற்கமைய மக்கள் தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் பெண்கள் அனைவரும் 8 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் 1000 ஆண்டுகால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ரஷ்யா உக்ரைனிடையே போர் நடைப்பெற்று வருகிறது. இப்போரினால் 3 லட்சம் ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.