மிக்ஜம் தந்த வலி
தலைப்பு;மிக்ஜாம் புயல்!!!
1.இயற்கை அழகை எண்ணி ரசிக்க!
2.தென்றலின் தீண்டலில் என்னைநான் மறக்க!
3.மெல்லிய சாரலில் மேனிசிலிர்க்க!
4.கரும்மேக சூழலும் இசையானஇடியும் இன்பமதைத்தர!
5.ஏகாந்தமாக இருந்தஎனக்கு அதுபுயலாகமாறி தினநடப்பத் திகைக்கவைக்க!
- சாலையில் வெள்ளம் சடுதியில்பெருக!
7.வாகனப்போக்குவரத்து தற்காலிகத்தடையாக!
7.அத்யாவசியத் தேவைகளுக்கு மக்கள் அல்லோகலப்பட!.
8.அழும்குழந்தை பசிதீர்க்க அன்னையவள்,பரீதவிக்க!
9.கீழ்த்தட்டு மக்கள் அன்றாடசெலவுக்கு அலைமோத!
10.மேல்தட்டுமக்கள் பொழுதுபோக்க தொலைக்காட்சியீன்றி தவிக்க!
11.மின்சாரமுமின்றி அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல
அனைத்துமக்களும் அலைமோத!- சிருங்காரசென்னை வெள்ளப்பெருக்கால் சீர்கெட!
13.பரிதவித்த மக்களுக்காக பாரதமேவேண்டிக்கொள்ள!
14.இக்கட்டானசூழலிலும் இறைநம்பிக்கை அத்தனையும் மீட்டெடுக்க!
15.போதும் போதும் இயற்கைசீற்றமே இனியொருமுறை உன்சீற்றமதைக்காட்டாதே!
16ஆறு,ஏரி இடங்களில் கட்டடங்கள் எழுப்பியதவறுக்கு நீதந்த தண்டனைபோதும்!- ஆத்திரம்தீர நீதந்த அத்தனை சோதனைகளும் போதும்!
17.இனிஇயற்கை என்றால்,இன்பமே எனும்அளவு இருந்துகொள்!
18மிக்ஜம் புயலாக நீகொடுத்த வேதனை போதும்போதும்போதும்!!
கோமதிசிதம்பரநாதன்,உறையூர்,திருச்சி3