எதிர்வரும் ஆண்டு மின்சார கட்டணம் குறையவுள்ளது..!
அடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த ஆண்டு நாட்டில் போதிய அளவு மழைவீழ்ச்சி காணப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதுள்ள நிலக்கரி தொழிற்சாலை மற்றும் டீசல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைக்க முடிந்துள்ளமையும் நன்மையான செய்தியாகும்.
இதன் காரணமாக மின் கட்டணம் குறைய வாய்ப்புக் காணப்படுகின்றது.
எனவே நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை நிறைவடைந்த பின்னர் ஜனவரி மாத நடுப்பகுதியில்,
மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்” இவ்வாறு அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.