சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கைசாத்திட்டது மாலை தீவு..!
மாலை தீவு ஜனாதிபதி சீனாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது நேற்று முன்தினம் சீனாவின் புஜியான் மாகாணத்தில் நடைப்பெற்ற மாலைதீவு வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர் சீனாவானது மாலைதீவின் மிக நெருங்கிய நட்பு நாடு என தெரிவித்ததோடு,தமது நாட்டுக்கான சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்குமாறும் கேட்டிருந்தார்.
இதனையடுத்து நேற்றைய தினம் சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியதோடு ,20 முக்கிய ஒப்பந்தங்களிலும் இருவரும் கைசாத்திட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.