தற்காலத்தில் போகி இப்படித்தான்..!
போகிப் பண்டிகை பற்றி ஒரு புதுமையான கவிதை_…. நீங்கள் இதுவரை படித்திருக்காதஒரு படைப்பு….
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
போகி பண்டிகை
புதுமையான கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
“விறகை”
எரிக்கச் சொன்னால்
நீங்கள் மரத்தையே
எரிக்கின்றீர்கள்….!!
“பயனற்றதை”
எரிக்கச் சொன்னால்
நீங்கள்
“பழையதை” எரிக்கின்றீர்….!
பணம் கூட பழையது தான்
அதை எரிப்பீர்களா….?
வீடு பழையது தான்
அதை கொழுத்துவீர்களா?
அவ்வளவு ஏன் ?
நீங்களே! பழையவர்கள் தான்
உங்களை
சிதை மூட்டுவீர்களா….?
உங்களுக்கு
சரியாகதத் துணி
மற்றவருக்குச் சரியான துணி….
உங்களுக்கு பழையத்துணி
நீங்கள் கொடுப்பவருக்குப் புதுத்துணி…..
உங்களுக்கு
தேவையில்லாத பொருள்
இன்னொருவருக்குத்
தேவையானப் பொருள்…..
போகி பண்டிகை என்பது
“இல்லத்தில்” இருக்கும்
பயனற்றதை மட்டும் அல்ல
“உள்ளத்தில்” இருக்கும்
பயனற்றதையும் எரிக்கத்தான்…..
உள்ளத்தின்
ஒரு மூலையில் கிடக்கும்
பொறாமையை எரி….
இன்னொரு
மூலையில் கிடக்கும்
கோபத்தை எரி…..
உள்ளத்தையே !
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
அர்த்தமற்ற
ஆசைகளை எரி…….
நொடிக்கு நொடி
உன் வாயிலிருந்து
வெளியேறும்
பொருளற்ற
வார்த்தைகளை எரி….!
உன்னையே
கொஞ்சம் கொஞ்சமாக
அரித்துக்கொண்டிருக்கும்
சுயநலத்தை எரி….!
பைத்தியக்காரன் பையாய்
உன் உள்ளம்
சேமித்து வைத்திருக்கும்
நினைவுக்குப்பைகளை எரி….
உடலில் மறைத்து
வைத்திருக்கும்
முறையற்ற பாலுணர்வை எரி….
கண்களில்
மறைத்து வைத்திருக்கும்
ஏற்றத்தாழ்வை ஏரி….
வார்த்தைகளில்
வளர்த்து வைத்திருக்கும்
முட்களை எரி …..
உன்னை விட உயரமாக
வளர்ந்திருக்கும்
துரோகத்தை வெட்டி எரி…
உன் ஆன்மாவுக்குள்
நிறைந்திருக்கும்
ஜாதி மத புதர்களை
வேரோடு பிடிங்கி எரி…
உன்னையே !
“குப்பையாக”
மாற்றிக் கொண்டிருக்கும்
சோம்பேறித்தனத்தை
முதலில் எரி……
எரிப்பதற்கு
ஆயிரம் இருக்கிறது…
தயவு செய்து….
பொய்யால்
உண்மையை எரிக்காதீர்…!!
வெறுப்பால் அன்பை
எரிக்காதீர்…!!
வேற்றுமையால்
ஒற்றுயைமை எரிக்காதீர்….!!
பிரிவால்
உறவை எரிக்காதீர்…..!!
துரோகத்தால்
நம்பிக்கையை எரிக்காதீர்….!!
சுயநலத்தால்
பொதுநலத்தை எரிக்காதீர்….!!
கோபத்தால்
அமைதியை எரிக்காதீர்….!!
அறியாமையால்
அறிவை எரிக்காதீர்….
ஜாதி மதத்தால்
காதலை எரிக்காதீர்….!!
இனியாவது
“பிணைத்தை” எரியுங்கள்
“ஆன்மாவை” எரிக்காதீர்கள்…..!!*♥அனைவருக்கும்* *போகி பண்டிகை நல்வாழ்த்துகள்....* 💐💐💐💐 இவண் *கவிதை ரசிகன்குமரேசன்....*