இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதி பங்கேற்பு..!
இந்தியாவின் 75 வது குடியரசு தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நாடெங்கும் நடைப்பெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு டில்லியில் குடிரசு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதன் போது 21 குண்டுகள் தீர்க்கப்பட்டது.அதன் பின்னர் முப்படைகளின் அணி வகுப்பு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,பிரதமர் நரேந்திர மோடி ,மத்திய மந்திரிகள்,எதிர் கட்சி தலைவர்கள் என பலரும் கலநதுக்கொண்டனர்.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் கலந்து சிறப்பித்திருந்தார்.