உதவி கோரி நின்ற மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..!
கடந்ந ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.
மேலும் நீர் ,உணவு,மின்சாரம்,மருத்துவம் என்பனவற்றுக்கும் தடை விதித்தது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் ,பலர் தமது வாழ்வை தொலைத்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கஸா பகுதியில் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 150 பேர் காயங்களுக்கு உள்ளானதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இத்தாக்குதலானது உதவி கோரி நின்ற மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ளது.
இதே வேளை நேற்று முன்தினம் காஸாவில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது 12 பேர் உயிரிழந்ததுடன்,75 ற்கும் அதிகமானோர் மீது காயமடைந்துள்ளதாக ஐ.நா வின் அதிகாரி தாமஸ் ஒயிட் தெரிவித்துள்ளார்.