அன்று அப்படி இன்று இப்படி…!

👏👏👏👏👏👏👏👏👏👏👏 *தியாகிகள் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

👏👏👏👏👏👏👏👏👏👏👏

1948 ஜனவரி 30 கோட்சே சுட்டு
மகாத்மா காந்தியின்
இதயத்தைத் துளைத்த போது
தியாகிகள் தினம் பிறந்தது
மகாத்மா காந்தியின்
இதயத்திலிருந்து…..

அன்று
‘நாட்டுக்காக’
உயிரையே !
தியாகம் செய்தனர்….
இன்று
‘நோட்டுக்காக’
நாட்டையே
தியாகம் செய்கின்றனர்….!!!

பிரிட்டிஷ் புட்டியிலிருந்து
சுதந்திரத் தண்ணீர்
மேலே வருவதற்குத்
தங்கள் உயிர்களையே
கற்களாக்கிப் போட்டவர்கள்… !!!

‘சுதந்திரம்
முளைப்பதற்குத் ‘
தங்களையே
விதைகளாக்கிப்
பூமிக்குள்
விதைத்துக் கொண்டவர்கள்…..!!!

குருதிப் பாசனம் செய்து
சுதந்திரப்பயிர்
வளர்த்தவர்கள்…..!!!

தேசம்
அநாதையாகி விடக்கூடாது என்பதற்காகத்
தனது குடும்பத்தையே
அநாதையாக்கியவர்கள்….!!!

நமது தேசியக்கொடியை
கம்பத்தில் ஏற்றுவதற்காகத்
தங்கள் உயிரை
உடலிலிருந்து
இறக்கிக் கொண்டவர்கள்….!!!

நமது சொந்தநாடு
நம்மை விட்டுப்
பிரிந்து விடாமலிருக்கத்
தங்கள் சொந்தங்களை விட்டுப்
பிரிந்தவர்கள்……

இயேசு
தன்னை அறைவதற்காகச்
சிலுவைச் சுமந்தார்….
இவர்களோ
யாரும் சிலுவையில்
அறைந்து விடக்கூடாது என்பதற்காகச்
சிலுவைச் சுமந்தார்கள்…

இவர்கள்
புதைக்கப்பட்டவர்கள் அல்லர்
இந்திய மக்களின்
இதயங்களில்
தேசப்பற்றாக
விதைக்கப்பட்டவர்கள்……

எல்லோரும் இறந்தால்
மண்ணாகுவார்கள்
இவர்கள் தான் பூமியில்
பொன்னானர்களோ என்னவோ?

இவர்கள் விட்டுவிட்ட
மூச்சுக்காற்றில் தான்
இந்தியாவின் தேசியக்கொடி
கம்பீரமாகப் பறக்கிறது….

இவர்கள் எல்லாம்
‘கல்லறையாக’ வில்லை
தேச அன்னையின் வயிற்றில்
‘கருவறையானவர்கள்…. !!!’

இவர்களின் மரணங்கள்
அழுகைக்கு
உரியது அல்ல
ஆராதனைக்குரியது…..

ஆனால்….

சுதந்திர தின விழாவின் போது
ஓர் ஓரமாக நிற்கின்றனர்
சுதந்திரத் தியாகிகள்…

ஒவ்வொரு ஆண்டும்
இவர்களுக்கு
அஞ்சலி செலுத்துவதற்காகவே!
எழுந்து நிற்கிறோம்….
என்று
‘அவர்களாக!’
எழுந்து நிற்கப்போகிறோம் ….? *கவிதை ரசிகன் குமரேசன்*

👏👏👏👏👏👏👏👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *