இந்தியாவின் இயற்கை அரண்..!

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

இந்திய கடலோரக்
காவல் படை தின
சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

இமயமலை
இந்தியாவின்
“இயற்கை அரண்” என்றால்
இவர்கள்
இந்தியாவின்
“செயற்கை அரண்….!”

கடலோரத்தில் நிற்கும்
கோயில் இல்லாத
“காவல் தெய்வங்கள்….!”

நாம்
குடும்பத்தோடு
“சேர்ந்து வாழ”
இவர்கள்
குடும்பத்தை விட்டு
“பிரிந்து வாழ்கின்றனர்… !”

இவர்களது ‘விழிப்பு’
நம்மை
நிம்மதியாக
‘உறங்க’ வைக்கிறது…..

இவர்கள்
கப்பல் மேல் நிற்கவில்லை
‘கத்தி முனையில் ‘
நிற்கின்றனர்……

கப்பற்படையின்
வலது கரம்……

கடமையே! அலைபோலே
இவர்களெல்லாம் அதன் மேலே
ஓடம் போல் அல்லாமல்
‘துடுப்பு’ போல் ஆடிடுவார்கள்
வாழ் நாளிலே…..!

இவர்கள்
ஆயுள் நாட்களுக்கு
எந்தச் சாதகமும்
உத்தரவாதம் தராது……!

தொலைநோக்கியும்
துப்பாக்கியுமே
இவர்களது
பொழுதுபோக்கு
சாதனம்…..

கடல் தோட்டத்திற்குக்
கம்பி வேலிகள்……

கொள்ளைக்கார மீன்களைத்
துப்பாக்கியால் பிடிக்கும்
சீருடை அணிந்த மீனவர்கள்….

கடல் செல்வங்களின்
பாதுகாப்புப் பெட்டகம்…..

கடத்தல் கும்பலை
வேட்டையாடும்
வேங்கைகள்……

தினமும்
அவர்களை
‘வணங்காமல்’ போனாலும்
இந்தத் தினத்திலாவது
அவர்களை ‘வாழ்த்துவோம்…!!!’

இந்தியக் கடலோர காவல் படை
தின நல்வாழ்த்துகள் *கவிதை ரசிகன்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *