கடும் மழையால் பாதிப்படைந்த இந்தோனேசியா..!
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் காணமல் போயுள்ளதாகவும் தேசிய பேரிடர்,மேலாண்மை முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து பாரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தள்ளதுடன், பாறைகளும் சரிந்துள்ளன.
இதில் 14 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ள நிலையில்,80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள நதிக்கரையோர கிராமங்களிலுள்ள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், மின்சாரத் தடை, வீதிகளில் ஓடும் வெள் நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் பெரும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவருகளுக்கான உடனடி உதவிகளை பொது அமைப்புகள் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.