பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
இன்றைய தினம் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 4.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
90 கி.மீ ஆழத்தில் இதன் அமையம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன.இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதே வேளை இப்பகுயில் இன்று அதிகாளை 2.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது ரிச்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.