புவி வெப்பத்தை குறைக்க இப்படி ஒரு முயற்சி..!
புவி வெப்பமடைதல் தற்காலத்தில் ஒரு சவாலான விடயமாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கினறனர்.
இதனால் புவிக்கு வரும் சூரிய வெப்பத்தை குறைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய கிளவுட் ப்ரைடனிங் என்ற முறையை பயன்படுத்தி குறைக்க திட்ட மிட்டு இருக்கிறார்களாம்.
இதற்கமைய வொஷிங்டன் பல்கலைகழக ஆய்வாளர்கள் சான்பிரன்சிக்கோ வில் விமானத்தில் இருந்து அதிக வேகத்தில் உப்பு துகள்களை வானத்தில் தூவி இருக்கிறார்கள்,இதன் மூலம் உள்ளே வரும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மேகங்களை பயன் படுத்துவதே இதன் நோக்கம்.
1990 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஜோன் லாதம் என்பவர் முன்வைத்த திட்டத்தையே இவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் .
எனினும் இது ஓர் தற்கால தீர்வாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.