வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா…?

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக,

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதிக பணவீக்கம், மக்களின் வருமான அதிகரிப்பு இல்லை , வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால்,

இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் பெறும் வறுமைக் கோட்டான ஒரு நாளைக்கு 3.65 டாலர் என்ற வரம்பை கணக்கில்,

எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையில் இந்த ஆண்டு இரண்டு லட்சமும் ,

அடுத்த ஆண்டு மூன்று லட்சமும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *