ஒருநாள் சேவையூடாக சாரதி அனுமதி பத்திரம் பெற முடியுமா?

தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக,

வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் 25 மாவட்ட அலுவலகங்களும் இந்த வருட இறுதிக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்தின் நிலைக்கு மேம்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் 17 ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நவீன
தொழிநுட்பத்தை பயன்படுத்தி,

செயற்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதே எமது அமைச்சின் பிரதான நோக்கமாகும்.

எமது நாட்டில் சுமார் 8.9 மில்லியன் வாகனங்கள் பாவனையில் உள்ளன.

அதேபோன்று சுமார் 85 இலட்சம் சாரதி அனுமதிப்பித்திரம் பெற்றுள்ளனர்.

சாரதி அனுமதிப்பித்திரங்களை வழங்கும் அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்தின் தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும்,ஏப்ரல் மாதத்திற்குள் விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பித்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக,

வழமைபோன்று அனைவருக்கும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்க அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் காலங்களில் ஒரு நாள் சேவையூடாக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *