படகோட்டிகள்..!

நண்பர்களே

ஒரு பெண் கேட்டுக் கொண்டதற்காக அக்கா பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அக்காக்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்….

🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *அக்காள்* *இன்னொரு* *அம்மா* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻

முதலில் பிறக்கின்ற
பெண் குழந்தை
“பெண்மையோடு” மட்டுமல்ல
“தாய்மையோடும்” பிறக்கிறது…

அடுத்த பிறக்கும்
குழந்தைகளுக்கு
அக்காள் அக்காவாக மட்டுமல்ல
அம்மாவாகவும்
இருக்கிறாள்….

தம்பி தங்கைகள்
தொட்டிலில் தூங்கிய
நேரத்தை விட
இவள் தோளில்
தூங்கிய நேரமே அதிகம்….!

அன்னை
தன் மார்பில்
” பாலூட்டி ” நாட்களை விட …
அக்காள் இவர்களுக்கு
இடையில்
” சோறூட்டிய “
நாட்களே அதிகம்….!!

அன்னை
“கர்ப்பப்பையில்”
இவர்களை
பத்து மாதம் தான்
சுமக்கிறாள்
அக்காள்
” இடையில் ” சுமந்த மாதம்
எத்தனையோ
யார் அறிவார்…?

தம்பி
தங்கைகளின்
முதல் பள்ளிக்கூடம்
அக்காவின் மடிதான்….

அக்காவிற்கு
“விட்டுக் கொடுக்கும்”
பண்பு மட்டுமல்ல….
“தலைமை பண்பு” கூட
தானாகவே வந்து விடுகிறது…!

சில சமயங்களில்
இவளே !
அப்பா அவதாரமும்
எடுக்க வேண்டி இருக்கிறது…

பல அக்காக்கள்
உடன் பிறப்புகளை
கரை சேர்க்க
” படகோட்டியாக ” இருக்கிறார்கள்..
சில அக்காக்கள்
” படகாகவே ” இருந்து
விடுகிறார்கள்……!!! *கவிதை ரசிகன்*

🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *