உலகின் பணக்கார நாடு என்ற பெயரைச் சீனா அமெரிக்காவிடமிருந்து பறித்துக்கொண்டது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகின் பணக்காரர்களின் சொத்துவளம் மூன்று மடங்காகப் பெருகியிருக்கிறது. உலக நாடுகளின் குடிமக்களின் சொத்துகளை ஒப்பிட்டதில் இக்குறிப்பிட்ட காலத்தில் சீனாவைச் சேர்ந்த பணக்காரர்களின் சொத்துக்கள் மற்றவர்களெல்லாருடையதையும் விட அதிக அளவில் பெருகியிருக்கிறது என்று தெரிகிறது. அதன் மூலம் சீனா செல்வ வளத்தில் அமெரிக்காவைப் பாய்ந்து தாண்டி முதலிடத்துக்கு வந்துவிட்டது.
உலகின் மொத்தச் செல்வங்களின் 60 % விகிதம் உலகின் பத்து நாடுகளிடம் உள்ளது. 2000ம் ஆண்டில் 156 திரில்லியன் டொலராக இருந்த உலகின் செல்வம் 2020 இல் 514 திரில்லியனாக அதிகரித்திருக்கிறது. அதே 20 ஆண்டுகளின் ஆரம்பத்தில் 7 திரில்லியனாக இருந்த சீனாவின் சொத்துக்கள் 120 திரில்லியனாக அதிகரித்திருக்கிறது.
சீனாவிலும், அமெரிக்காவிலும் குவிந்திருக்கும் சொத்துக்களில் முக்கால் பாகம் அந்த நாட்டில் 10 பெரும் பணக்காரர்களிடமே சேர்ந்திருக்கிறது.
செல்வத்தின் பெறுமதி வளர்ச்சிக்கு முதல் காரணமாக இருப்பது நிலங்கள், கட்டடங்கள் போன்ற நிலையான சொத்துக்களின் பெறுமதியில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்