ஆப்கானிஸ்தான் பெண் உதைபந்தாட்டக் குழுவினரும், அவர்களதுடைய குடும்பத்தினரும் பிரிட்டனில் வந்திறங்கினர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவர்களுடைய ஆட்சியில் தங்களுக்கு ஆபத்து என்று பயந்த ஆப்கானியப் பெண்கள் கால்பந்தாட்டக் குழுவினர் நாட்டை விட்டுத் தப்பியோட உதவி கோரினார்கள். அவர்களுக்கு உதவ நடிகை கிம் கர்டாஷியான், பிரிட்டிஷ் உதைபந்தாட்டக் குழுவான லீட்ஸ் யுனைடட் மற்றும் யூத மதகுரு மோஷே மார்கரெத்தன் ஆகியோர் முன்வந்தார்கள்.
முதல் கட்டமாக அவர்களுடைய உயிருக்குப் பாதுகாப்பளிக்க அவர்களனைவரும் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த இளம் உதைபந்தாட்டப் பெண்கள் ஏழைகளாகும். எந்த ஒரு விமானத்திலும் அவர்களுக்குப் பயணிக்க இடம் கிடைக்கவில்லை, அதற்கான பணவசதியும் அவர்களிடமில்லை. அவர்களுடைய குடும்பத்தினரும் அவர்களுடன் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
யூத மதகுரு மோஷே மார்கரெத்தன் அந்த இளம் பெண்களின் உதைபந்தாட்ட ஆர்வத்துக்கு ஊக்கமளித்து ஏற்கனவே உதவிசெய்து வந்தவராகும். அவர் ஏற்கனவே பிரபல நடிகை கிம் கர்டாஷியனுடன் சேர்ந்து அமெரிக்காவில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவராகும்.
பாகிஸ்தானில் தங்கவைக்கப்பட்டிருந்த அந்த இளம் பெண்கள் அவர்களது, குடும்பத்தினருடன் அடங்கிய 130 பேர் வியாழனன்று காலை பிரிட்டனின் ஸ்டாண்ட்ஸ்டெட் விமான நிலையத்தில் வந்திறங்கியதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
பிரிட்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாழ்க்கை பிரிட்டனில் ஆரம்பிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆஸ்ரேலியாவின் உதவியுடன் வெளியேற்றப்பட்ட ஆப்கான் பெண்கள் தேசிய உதைபந்தாட்டக் குழுவினர் போர்த்துக்காலில் தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்