அம்மா

உருவம் தெரியும் முன்பே நேசித்தவர் அன்னையைத் தவிர வேறு யார் இருக்க முடியும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே அன்னை மட்டும் தான்
பாசம், அக்கறை, கண்டிப்பு, காட்டி நல்வழிப்படுத்தும் அழகு தேவதை அம்மா
கவிதை என்று சொன்னால் அம்மா தான்
அன்னையின் தோளில் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலை தூரம்
அன்னையின் மடியில் உறங்கும் போது இன்பம் மட்டுமே கரை புரண்டோடும்
முகத்தைப் பார்த்தே மனதைப் படிக்கும் திறன் தாயிடம் மட்டுமே

தன் சுகங்களைத் துறந்து நமக்காக வாழும் ஜீவன் அன்னை.
இரவும் பகலும் கண்கள் மூடாமல் காத்து நின்றவர் அன்னை.
கோபத்தில் சென்றாலும் வரும் வரை தவித்து நிற்கும் ஆருயிர் தெய்வம் அம்மா.
பாசம் அன்பின் மொத்த உருவம் அன்னை தான்.
அன்பு காட்டுவது எப்படி என்று அன்னையின் கண்களில் இருந்து தெரிந்து கொண்டேன்
நம்மை தினம் தினம் சுமக்கும் ஒரே ஜீவன், – அம்மா!


எழுதுவது : விஜயலட்சுமி