அமெரிக்காவின் மத்திய வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த வருடத்தில் 3 தடவைகள் அதிகரிக்கும்.
உலகின் முக்கிய பொருளாதாரப் பிராந்தியங்களில் இருந்து வெளியாகும் பணவீக்கம், விலை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவையைக் கவனித்து அமெரிக்காவின் மத்திய வங்கி தான் எடுக்கப்போகும் நடவடிக்கையைத் தெரிவித்திருக்கிறது. அடுத்த வருடம் மத்திய வங்கியின் கடனுக்கான வட்டி விகிதம் மூன்று தடவைகள் உயர்த்தப்படும் என்று அறிவித்து, தற்போதைக்கு அதை உயர்த்தாமல் விட்டிருக்கிறது.
சமீப மாதங்களில் அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொள்வனவுப் பொருட்களின் விலையதிகரிப்பு, பணவீக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று அமெரிக்க மத்திய வங்கி கருதுகிறது. எனவே நீண்டகாலமாக [தற்போது 0 %] மிகக்குறைந்த அளவிலிருக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தவிருக்கிறது.
அத்துடன் கொரோனாக்கட்டுப்பாடுகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதற்காக வாங்கிவந்த கடன் பத்திரக் கொள்வனவுகளை வேகமாகக் குறைத்து வரும் மாதங்களில் முற்றாகவே நிறுத்திவிடவிருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்