250,000 வெளிநாட்டவர்களின் சாரதிப்பத்திரங்களை ரத்து செய்யப் போகிறது குவெய்த்.

போலியான ஓட்டுனர் பத்திரங்கள், சாரதிப் பத்திரங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வீதிகளில் போக்குவரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு குவெய்த்தில் வாழும் வெளிநாட்டவர்களின் 250,000 ஓட்டுனர் பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும் அரசு அறிவித்திருக்கிறது. இம்மாதம் ஆரம்பிக்கப்பட்ட அந்த நடவடிக்கை வரும் 3 மாதங்களில் பூர்த்தியடையும்.

குவெய்த்தின் உள்ளூராட்சி அமைச்சு வாகன ஓட்டுனர்கள் எல்லோருக்கும் புதிய அடையாள அட்டைகளை வினியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. அவைகளுக்கான சட்டவரையறைகள் முன்பிருந்ததை விட வித்தியாசமானவை. அத்துடன் அவை பாதுகாப்பானவை என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே, 250,000 ஓட்டுனர் அடையாள அட்டைகள் ரத்துச் செய்யப்படும் அதே சமயம் அனுமதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கப்படும்.

வெளிநாட்டுக் குடிமக்களின் எண்ணிக்கையக் கட்டுப்படுத்தி அவர்களின் உரிமைகளையும் குறைப்பதற்காக குவெய்த் பாராளுமன்றத்தில் பல அங்கத்துவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள். 

சமீபத்தில் அப்துல்லா அல் -திரெய்ஜி என்பவர், “வெளிநாட்டவர்களில் ப்லர் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கிறார்கள். பலர் போலிச் சாரதி அட்டையைப் பாவிக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கு இரண்டு கார்கள் மட்டுமே வைத்திருக்குமாறு சட்டத்தால் கட்டுப்படுத்தவேண்டும். மேலதிகமாக வேண்டுமானால், பிரத்தியேக அனுமதி பெற்றுக் கட்டணம் செலுத்தவேண்டும்,” என்றார்.

சாள்ஸ் ஜெ. போமன்