பிரான்சில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக நீதித் துறையின் எச்சரிக்கை


12 வயதேயான அம்சா என்ற சிறுவன் கடத்தப் பட்டுள்ளதாக பிரன்ச் காவல் துறரீன்று சனிக் கிழமை அதிகாலை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
பிரான்சின்  ‘ப்பா த கலே’ என்ற வட மாவட்டத்தின் ‘ஃபுக்கியர் லெ லான்ஸ்’ என்ற ஊரில் நேற்று , வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்தேறியுள்ளது .

காணாமல் போன சிறுவனை அவன் தந்தையே கட்டத்தியிருக்கலாம் எனவும் அச் சிறுவனை பிரன்ச் எல்லைக்கு வெளியே கடத்திச் செல்லலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகிக்கப்படும் சிறுவன் அம்சாவின் தந்தை 1.73 மீட்டர் உயரமுள்ளராகவும்  , தலையை மொட்டை அடித்தவராகவும் இருப்பார் என பிரன்ச் நீதித் துறை அடையாளப்படுத்தியுள்ளது . சிறுவன் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் , சந்தேகிக் ப்படும் சிறுவனின் தந்தை கடைசியாகப் பயன்படுத்திய ‘ரெனோ டிவிங்கோ ‘ மகிழுந்து நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

பிள்ளையைக் கடத்தியத் தந்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தப்பிவிடாதபடி விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன .
கடத்தப்பட்டுள்ள சிறுவன் அம்சா இருக்கும் இடம் பற்றித் தகவல் அறிந்தவர்கள் 197 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என பிரன்ச் அரசாங்கம் அறிவுறித்தியுள்ளது .

எழுதுவது : கமல்ராஜ்